ஹோட்டல் குளியலறை வீடியோ விவகாரம்!
U-19 கிரிக்கெட் வீரர்கள் இருவர் கைது
கருத்தரங்கிற்காக நாராஹேன்பிட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் வைத்தியர்களை குளியலறையில் வீடியோ எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாராஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்ததாவது, சம்பந்தப்பட்ட இருவரும் பெண்கள் மட்டுமன்றி ஆண்களையும் மறைமுகமாக வீடியோ எடுத்ததாகவும், அந்த காட்சிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.





