முன்னால் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்)ஆதரவாக 17.04.2026 இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அடையாள சத்தியாகிரகப் போராட்டம் இடம் பெற்றது!
இப் போராட்டம் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்தும், சிறையில் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி அவருக்கு நீதி வேண்டியும் சிவ நேசதுரை சந்திர காந்தனின் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாகவும் இந்த சத்தியாகிரக போராட்டம் கருப்புப்பட்டி அணிந்து அமர்ந்தவாறு காந்தி பூங்கா முன்பாக அமைதியான முறையில் இடம்பெற்றது.
போராட்டம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் கட்சி உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.


.jpeg)
.jpeg)

.jpeg)




