மட்டக்களப்பு
புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் 14வது ஆண்டு
நிறைவு விழா கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன்
முன்னிலையில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
இதனை
சிறப்பிக்கும் முகமாக, கல்லூரி பயிலுனர்களுக்கிடையே Presentation, Quiz
போன்ற அறிவு மற்றும் மென் திறன் போட்டிகளும், Chess மற்றும் Carrom போன்ற
உள்ளரங்க திறன் விளையாட்டுகளும் இடம்பெற்றன.
இதில்
புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகள் உட்பட கரடியனாறு மற்றும்
காரைதீவு சமுதாயக் கல்லூரிகளிலும் பயிலும் 130-க்கும் மேற்பட்ட பயிலுனர்கள்
கலந்து கொண்டனர்.
Presentation,
Quiz, Chess, Carrom போன்ற நான்கு கட்டங்களாக நடைபெற்ற இப்போட்டிகளில்,
பயிலுனர்கள் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். இதன் மூலம், கல்லூரி
பயிலுனர்கள் மத்தியில் மறைந்துள்ள ஆற்றல்களை வெளிப்படுத்தும் முக்கியமான
சேவையை நிகழ்த்தி வருகிறது.
இறுதியாக,
போட்டிகளில் கலந்து கொண்ட பயிலுனர்களுடன் கல்லூரியின் நிறைவேற்றுப்
பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் மற்றும் நடுவர்களுடன் கலந்துரையாடல்
நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், போட்டியாளர்கள் தமது திறமைகளை மேலும்
மேம்படுத்திக்கொள்ள ஆக்கபூர்வமான கருத்துகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன.
( வி.ரி.சகாதேவராஜா)













