வரதன்
மட்டக்களப்பு, கல்லடி வேலூர் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு விற்ற குற்றச்சாட்டில் 105 போத்தலுடன் பெண் ஒருவரை நேற்று பிற்பகல் கைது செய்ததாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்
ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒன்றாக எனும் போதைப் பொருள் ஒழிப்பு விசேட திட்டத்தை அமைவாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதன் ஒரு கட்டமாக
மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே மட்டக்களப்பு தலைமையக பொறுப்பதிகாரி ஜி.ம்.பி.ர பண்டார தலைமையிலான குழுவினர் முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு விற்பனை நிலையங்களை முற்றுகையிட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்







