.
அகில
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப் போட்டியில் வெற்றி ஈட்டிய
சம்மாந்துறை வலய றாணமடு இந்துக் கல்லூரி மாணவர்களான ரி. கிறிஸாந்த் மற்றும்
வி. றுஸானன் ஆகியோரை பாராட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் கே.
கதிரைநாதன் தலைமையில் நேற்று 2026.03.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை
கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது .
இதில்
சிறப்பு அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் சித்திரப் பாட
ஆசிரிய ஆலோசகர் எஸ். எல். அப்துல் முனாப் கலந்து சிறப்பித்தார்.
மேலும்
இம்மாணவர்களுக்கு கற்பித்த வழி நடாத்திய ஆசிரியர்களான வி. தேவேந்திரன்
திருமதி ஆர். கவிதீஸன் ரூபினி ஆகியோரையும் கல்லூரி சமூகம் பாராட்டியமை
குறிப்பிடத்தக்கது.
( வி.ரி.சகாதேவராஜா)








