ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய மாடி வீட்டுத் தொகுதியை நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர நேரில் சென்று அவதானித்தார்.

 



கொட்டாவையில் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய மாடி வீட்டுத் தொகுதியின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கண்டறிவதற்காக, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர கடந்த 09 ஆம் திகதி அங்கு நேரில் சென்று அவதானித்தார்.

இந்த வீட்டுத் திட்டம் சீன அரசாங்கத்தின் உதவித் தொகையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டம் 7 மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ளது. இதில் மொத்தம் 108 வீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கான மொத்த கட்டுமானச் செலவு ரூ. 1,500 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் கூடிய இந்த வீட்டுத் தொகுதியில் மத்திய எரிவாயு விநியோகக் கட்டமைப்பு போன்ற வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை எதிர்வரும் 2 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக திட்டப்பணிப்பாளர் நிஹால் திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.