-

கல்முனை
மாநகர ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தில் நாளை (22) ஞாயிற்றுக்கிழமை
நடைபெறும் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழாவில், தெய்வீக கானங்கள்
இறுவெட்டு வெளியீடு இடம்பெறவிருக்கின்றது.
ஆலயத்தலைவர்
பிரபல தமிழாசான் வே.செவ்வேட்குமரன் முன்னிலையில், இறுவெட்டு நெறியாளர்
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இவ் இறுவெட்டு வெளியீடு
இடம்பெறவிருக்கின்றது.
காரைதீவு
தெய்வீக கான சபையின் ஸ்தாபகர் விபுலமணி இ.கோபாலசிங்கம் தயாரித்த 24 சிவ
கானங்கள் அடங்கிய இறுவெட்டு நாளை பகல் 12 மணிக்கு ஆலய சந்நிதானத்தில்
வெளியீடு செய்யப்படும்.
( வி.ரி.சகாதேவராஜா)
.jpg)




