பதுக்கல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் அல்லது அதற்குத் துணைபோகும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 


நாட்டில் தேவையற்ற முறையில் எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்களைக் கண்டறிவதற்காகக் காவல்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவினரை உள்ளடக்கிய விசேட சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு பதற்றங்களால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் பயன்படுத்தி, எரிபொருளைப் பதுக்கி வைக்கும் நபர்களைக் கண்டறியும் பணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக நாடு தழுவிய ரீதியில் விசேட புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பதுக்கல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் அல்லது அதற்குத் துணைபோகும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, விதிமுறைகளை மீறும் நிலையங்களின் எரிபொருள் விநியோக உரிமங்களை (License) ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.