மார்ச் 01 முதல் “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல் திட்டம்” உடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு இன்று (4.3.2026)
பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகெளரி தினேஷ் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக முன்றலில் விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் – "அகன்று செல்” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு.கிருஷ்ணபிள்ளை இளம்குமுதன், நிர்வாக உத்தியோகத்தர் திரு. வேலாயுதம் தவேந்திரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.






















