மீன் பாடும் தேன் நாட்டில் கம்பன் புகழ் பாடும் கதிரவன் ; போபால் கம்பன் கழகத்தோடு இணைந்து பிரமாண்டமான கம்பன் விழா

 



கதிரவன் கலைக் கழகம் 50 ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்வுகளை முன்னிட்டு  "ஊர் இருந்து உலகம் வரை" எனும் கருப்பொருளில் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றது

நிகழ்வுகளின் வரிசையில் பிரமாண்டமான கம்பன் விழா 29.03.2026 இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு-கிரான்குளம் சீ மூண் கார்டன் மண்டபத்தில் காலை 9.00 மணி தொடக்கம் 12.30 மணி வரை அயோத்தி அரங்கு காலை  அமர்வாகவும், பிற்பகல் 3.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை இலங்கேஸ் வரர் அரங்கு மாலை அமர்வாகவும் இடம்பெறவுள்ளது.

கதிரவன் கலைக் கழகம் நடத்தும் கம்பன் விழாவோடு போபால் கம்பன் கழகம் மற்றும் இன்னும் சில கலை, இலக்கிய, பண்பாடு சார் அமைப்புக்கள்,  ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், பேராளர்கள் கைகோர்த்துள்ளமை சிறப்பம்சமாகும்.

பட்டிமன்ற நடுவர் கதிரவன் தலைவர் - கதிரவன் த.இன்பராசா ஒழுங்கமைப்பில், போபால் கம்பன் கழகச் செயலாளர் திரு பா.குமார் அவர்களின் இணைப்பாக்கத்தில்  நடைபெறும் இவ்விழாவில் கவிச்சமர், பட்டிமன்றம், கலைஞர் கௌரவம், நாடகம், நடனம்,பேச்சு முதலான இன்னோரன்ன நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் நல்லாசியுடன் முழு நாள் நிகழ்வாக நடைபெறும் இவ்விழாவின் அயோத்தி அரங்கு கதிரவன் கலைக் கழகத் தாபகர் கலாபூசணம் சி.தங்கராசா அவர்களின் முன்னிலையில்,  புதுக்குடியிருப்பு சிறி விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு ஜனார்த்தனன் குருக்கள் அவர்களிள் ஆசியுரையுடன்,  போபால் கம்பன் கழகத் தலைவர் முனைவர் சௌந்தர்ராஜன் அவர்களின் தலைமையுரையோடு, போபால் கம்பன் கழகச் செயலாளர் திரு பா. குமார் அவர்களின் தொடக்க உரையோடு ஆரம்பமாகவுள்ளது.  

பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி இரா முரளீஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினராகவும், மண்முனைப் பற்று பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் திரு கி.இளங்குமுதன் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் திரு கு. பார்த்திபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும்

புதுக்குடியிருப்பு ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு வே. தட்சணாமூர்த்தி, அகில இலங்கை சைவப் புலவர் சங்க உப தலைவர் சைவப்புலவர் சிவானந்தஜோதி ஞானசூரியம், தினகரன் வாரமஞ்சரி தலைமையாசிரியர் திரு. D. செந்தில்வேலவர், வீரகேசரி மற்றும் தினக்குரல் பிரதம ஆசிரியர் திரு எம். செந்தில்நாதன், உதவும் கரங்கள் தலைவர் திரு ச. ஜெயராஜா, அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ் சந்துரு பெர்னான்டோ, வுனியா பல்கலைக் கழகம் கலாநிதி நாகமுத்து தணிகாசலம்பிள்ளை, தினகரன் வாரமஞ்சரி தலைமைத் துணை ஆசிரியர் திரு K. ஈஸ்வரலிங்கம், உலகளாவிய மனித உரிமைகள் அமைப்பின் ஆலோசகர் சிவசிறி சிவ தர்சக சர்மா குருக்கள், வீரகேசரி மற்றும் தினக்குரல் ஆசிரியர் திரு S.ஸ்ரீகஜன், I.B.C தமிழ் கீர்த்தி,  ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

அயோத்தி அரங்காக பெயர் சூட்டப்பட்டுள்ள காலை அமர்வு விருந்தினர்கள் வரவேற்றல் மற்றும் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி, அன்னை சாரதா அறநெறிப் பாடசாலை மாணவர்களின் இறைவணக்கத்தோடு கதிரவன் கீதம் இசைக்கப்பட்டு ஆசியுரை வழங்கப்பட இருக்கின்றது.

தொடர்ந்து கதிரவன் கலைக்கழக செயற்குழு உறுப்பினர் ஆசிரியர் திரு பு. யுவதாஸ் அவர்களின் வரவேற்புரையுடன், மட்/மட் புதுக்குடியிருப்பு  கண்ணகி மகா வித்தியாலய கண்ணகி கலா மன்ற மாணவர்களின் வரவேற்பு நடனம் அரங்கை அலங்கரிக்க இருக்கின்றது. இந்தியா போபால் கம்பன் கழகத் தலைவர் முனைவர் பா.கா. சௌந்தர்ராஜன் அவர்களின் தலைமை உரையுடன் , கம்பன் விழா தொடக்க உரையினை இந்தியா போபால் கம்பன் கழகச் செயலாளர் திரு பா குமார் அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.   

நிகழ்வுகளின் வரிசையில் அயோத்தி அரங்க அறிமுகத்தினை ஷர்மிலா சுப்ரமணியம் அவர்கள் நிகழ்த்த, நடன நிகழ்வினை கோபிநாத் அகன்யா அவர்கள் ஆற்றுகை செய்யவுள்ளார். தேசிய மட்ட கதாப்பிரசங்க போட்டியில் வெற்றி பெற்ற  இன்பராசா புகழாரணி அவர்களின் கதா பிரசங்கமும், தனுஷ்கரன் மிர்த்திகா அவர்களின் கவிதையும் தனுராஜ் ஆதித்யஸ்ரீ அவர்களின் பேச்சும் இடம் பெறவுள்ளது.

கம்பன் விழாத் ஒழுங்கமைப்புத் தலைவர் கதிரவன்  த. இன்பராசா அவர்களின் ஊர் இருந்து உலகம் வரை என்னும் தலைப்பிலான சிறப்புரையினைத் 

தொடர்ந்து ஏழு வயது சிறுமி சுப்பிரமணியம் காவியஸ்ரீ அவர்களுக்கு  மனிதக் கணிப்பான் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெறுவதோடு சட்டத்தரணி  அ. அன்பழகன் குருஸ் தலைமையில் கம்பன் கவிச்சமர் இடம்பெற உள்ளது. கவிச் சமரில் கவிமகள் ஜெயவதி மற்றும் கவிஞர் ரவி கிருஷ்ணா ஆகியோர் சமரிட உள்ளனர்.

தொடர்ந்து 150 அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான  போட்டி நிகழ்விற்கான  பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படுவதோடு, விருந்தினர்க ளுக்கான கம்பன் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெறவுள்ளது.  

நிகழ்வின் விருந்தினர்களின் வாழ்த்துரைகளோடு நன்றியுரையினை நர்மதா அகளங்கன் அவர்கள் நிகழ்த்த நிகழ்ச்சித் தொகுப்பினை கவிஞர் ஜீ.எழில்வண்ணன் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். 

அமர்வு இரண்டு இலங்கேஸ்வரன் அரங்காக பெயரிடப்பட்டு பிரம்மாண்டமான நிறைவு விழா இடம் பெற இருக்கிறது. அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத் தலைவர் இறைபணிச் செம்மல் த. கைலாயபிள்ளை ஆசியுரை வழங்க வேல்முருகன் சகோதரர்கள் அண்ணாச்சி சண் சிவபாதசுந்தரம் நிகழ்விற்கு முன்னிலை வகிக்கவுள்ளார்.

கதிரவன் ஆலோசகர் திரு அ. குலேந்திரராஜா தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் அவர்கள் வருகை தர உள்ளார். சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு தினகரன் ரவி அவர்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் திரு த. குணராசா அவர்களும் கலந்து சிறப்பிப்பதோடு கௌரவ விருந்தினர்களாக கண்ணகி கலை இலக்கியக் கூடல் தலைவர் செங்கதிரோன்  த. கோபாலகிருஷ்ணன், மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கி. குணநாயகம், மட்டக்களப்புத் தமிழ் சங்கத் துணைத் தலைவர் திரு செ. அமிர்தலிங்கம்,  மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு மூ.சிவானந்தராசா, புதிய நூற்றாண்டு அரிமா கழகத் தலைவர் அரிமா ரணசிங்க லலித்குமார்  ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

நிகழ்வுகளின் வரிசையில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் புதுக்குடியிருப்பு அம்மன் அறநெறி பாடசாலை மாணவர்களின் இறைவணக்கம் இடம் பெற்று கதிரவன் கீதம் இசைக்கப்படும்.

தொடர்ந்து மட்/மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய கண்ணகி கலா மன்ற  மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்று.  கதிரவன் கலைக்கழக பொருளாளர் திரு சி. சுதேஸ்வரன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற வுள்ளது.

கவிஞர் தங்க யுவன் அவர்களின் இலங்கேஸ்வரன் அரங்க அறிமுகத்துடன், களுதாவளை சைவ மகா சபையின் வில்லுப்பாட்டு அரங்கை அலங்கரிக்க இருக்கின்றது. தொடர்ந்து ஸ்ரீ முருகன் நாட்டிய சேத்ரா மாணவிகளின் நடனம் இடம்பெற்று கம்பன் விழாவின் சிறப்புப் பட்டிமன்றம் பட்டிமன்ற நடுவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் கம்பராமாயணத்தில் மேலோங்கி நிற்பது உறவா....?  நட்பா....? என்னும் தலைப்பில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் 171 வது பட்டிமன்றமாக அரங்கேற்றம் காண உள்ளது. உறவே.....! எனும் அணியில் மட்டுநகர் சிவ வரதகரன், பாலமீன்மடு இரா கலைவேந்தன் ஆகியோரும் நட்பே......! எனும் அணியில் கவிஞர் அழகுதனு,  சோலையூரான் ஆ தனுஷ்கரன் ஆகியோரும்  விவாதிக்க உள்ளனர்.

பட்டிமன்றத்தினைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை கௌரவிக்கு முகமாக கம்பன் நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். அத்துடன் கதிரவன் கலைக் கழகத்தின் ஆரம்பகால அங்கத்தவர்கள் கௌரவம் பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வில் நகைச்சுவைப் பூபாலன் நன்றியுரை வழங்க கதிரவன் கலைக்கழகச் செயலாளர் புதுவையூர் பு தியாகதாஸ் நிகழ்வினை தொகுத்து வழங்க உள்ளார். 

நிறைவாக விருந்தினர்கள் கௌரவிப்போடு சிவ தட்சுதன் அவர்களின் தமிழ் மொழி வாழ்த்து இடம்பெற்று கம்பன் விழா இனிதே நிறைவடைய இருக்கின்றது.

கதிரவன் த.இன்பராசா