மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் அய்யாதுரை நடேசன் 22ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ( ஞாயிற்றுக்கிழமை)காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது.
காந்தி பூங்காவில் உள்ள ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இருநிமிட மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டு,விளக்கேற்றி,மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன் அவரின் திருவுருவப்படத்திற்கு சிரேஸ்ட ஊடகவியலாளர்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீ நேசன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அடியனேந்திரன் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், கலந்து கொண்டனர்


.jpeg)


.jpeg)

.jpeg)




.jpeg)


.jpeg)






