சம்மாந்துறையில் அமைந்துள்ள Big Chef Restaurant மண்டபத்தில், ஒரு தேசத்தின் சிறுவர் அறக்கட்டளை உலகளாவிய அமைப்பின் முதலாவது அறிமுக விழா நிகழ்வு 18.07.2026 (சனிக்கிழமை) அன்று மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது. இந்நிகழ்வு அம்பாசிடர் நிறுவனர் பன்னாட்டு தலைவர் கலாநிதி பிரதாப் சந்திரம் அவர்களின் பணிப்புரைக்கமைய திருமதி பிரதாப் ஜெஸ்மின் திரு ஜே யோவான் மற்றும் பணிப்பாளர்கள் நிர்வாக தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக S.L.M. ஹனிபா ( பிரதேச செயலாளர், சம்மாந்துறை) கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். விசேட அதிதியாக திரு. மகேந்திரகுமார் (வலயக்கல்விப் பணிப்பாளர், சம்மாந்துறை) அவர்கள் கலந்து கொண்டார். மேலும், கௌரவ அதிதிகளாக & கெளரவ v. வினோகாந்த உதவி தவிசாளர் பிரதேச சபை சம்மாந்துறை கெளரவ M. நபாஸ் NPP அமைப்பாளர் உறுப்பினர் பிரதேச சபை & OIC Nishantha Pradeep Kumara – பொறுப்பதிகாரி, சம்மாந்துறை பொலிஸ் நிலையம், & W.S.I. Weerakody – சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், சம்மாந்துறை பொலிஸ் நிலையம், & Dr. U. Habeeb Mohammed, பணிப்பாளர் பிராந்திய பல் வைத்திய நிபுணர் பணிமனை கல்முனை A. அசோகன் இலங்கை இந்தியா உறவு மேம்பாட்டு சிறுதானிய உற்பத்தி மேம்பாட்டு தலைவர் & MI கரீமா, AJ . குரைஷா சிறுவர் பாதுகாப்பு பிரிவு பிரதேச செயலகம் சம்மாந்துறை & A.M.Sajith, கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் தலைவர் மட்டக்களப்பு தரவை 02 MBA. Rasool, SDD Z.M. Risvi, Preschool DS Office S.Thiruchchelvem, GS மட்டக்களப்பு தரவை 02 S.Ilagkopan,(அதிபர்) ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் M.A.C. Razak jp (அதிபர்) மற்றும் சர்வ மத தலைவர்கள் உட்பட பல்வேறு அரச துறை அதிகாரிகள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வின் போது அமைப்பின் மத்திய மாகாண தலைவி கலாநிதி திருமதி R. வசந்தகாலம் மற்றும் மாவட்ட தலைவர்கள் மற்றும். M. i சியானா. i ரிஸ்வானா. திருமதி R. சைலஜா திருமதி R . டிப்னாகுரூஸ் கலாநிதி செல்வி எஸ் விஜிதா திருமதி N நந்தினி திருமதி R.பிரியதர்ஷினி கலாநிதி திருமதி S. நிர்மலா திருமதி. S சீதாலட்சுமி திருமதி N. மஞ்சுளா திரு வி கோவிந்தராஜா செல்வி S ராஜலட்சுமி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான அடையாள அட்டைகள் மற்றும் நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன. இது அமைப்பின் எதிர்கால சமூகப் பணிகளுக்கான வலுவான ஆரம்பமாக அமைந்தது. அத்துடன், நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள், கல்விமான்கள், மற்றும் சமூகப் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் அமைப்பு முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் கல்வியை இடைநிறுத்திய மாணவர்களுக்கான மீள் கல்வித் திட்டங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டங்கள் சிறுவர் பாதுகாப்பு மற்றும் நலன் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் சமூக முன்னேற்றத்திற்கான நிலையான சேவைகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு, எதிர்காலத்தில் திட்டமிட்ட முறையில் செயல்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. ஒரு தேசத்தின் சிறுவர் அறக்கட்டளை உலகளாவிய அமைப்பின் முதலாவது விழா நிகழ்வு, சமூக சேவைக்கான வலுவான அடித்தளத்தை அமைத்ததுடன், சிறார்களின் கல்வி, பாதுகாப்பு மற்றும் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு புதிய பயணத்தின் வெற்றிகரமான தொடக்கமாகவும் அமைந்தது. நிகழ்வின் போது அதிதிகள் ,கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு கெளரவமும் வழங்கப் பட்டது இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய தலைமைத்துவம், பிரதம அதிதிகள், கௌரவ அதிதிகள், அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் ஒரு தேசத்தின் சிறுவர் அறக்கட்டளை உலகளாவிய அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். "சிறார்களின் நலனே – நாட்டின் வளமான எதிர்காலம்." ஒன்றிணைவோம்... சேவையாற்றுவோம்... சிறந்த சமூகத்தை உருவாக்குவோம்.


.jpeg)










.jpeg)










.jpeg)


.jpeg)

.jpeg)


.jpeg)



.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)



.jpeg)

.jpeg)
.jpeg)





