இந்தியா
போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “கம்பன்
புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான கம்பன் விழா
மட்டக்களப்பு
புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில், எதிர்வரும் மார்ச்
29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வை கதிரவன் கலைக் கழக தலைவர் த. இன்பராசா தலைமையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போபால்
கம்பன் கழகத்தின் 50ஆவது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகள்
இடம்பெறுகின்றன.
காலை
அமர்வு “அயோத்தி அரங்கு” எனப் பெயரிடப்பட்டு, காலை 9.00 மணி முதல் பிற்பகல்
12.30 மணி வரை நடைபெறும். தொடர்ந்து, மாலை அமர்வு “இராவணேஸ்வரர் அரங்கு”
எனப் பெயரிடப்பட்டு, பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
தமிழ் இலக்கிய மேதை கம்பனைப் போற்றும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், புகழ் பாடல்களும் இடம்பெறவுள்ளன.
“கம்பன்
புகழ் பாடும் கதிரவன்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்விற்கு இலக்கிய
ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள்
அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
+94759175981 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்று கதிரவன் இன்பராசா தெரிவித்தார்.
( வி.ரி. சகாதேவராஜா)








