சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் ‘விபத்து மற்றும் அவசர சிகிச்சை முறைமைக்கான பணிப்பாளர் அலுவலகம் நிறுவப்படவுள்ளது..

 


நாட்டில் அதிகரித்து வரும் விபத்துகள் மற்றும் தீவிர நோய்த் தாக்கங்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வசதிகளை மேம்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதற்காகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் ‘விபத்து மற்றும் அவசர சிகிச்சை முறைமைக்கான பணிப்பாளர் அலுவலகம்’ (Directorate of Accident and Emergency Care System) நிறுவப்படவுள்ளது.

இந்த அலுவலகம் மூலம் தற்போதுள்ள சிதறிய சேவைகளை ஒருங்கிணைத்து, தரமான வழிகாட்டல்கள் மற்றும் பிராந்திய ரீதியிலான அவசர சிகிச்சை மையங்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.