சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் கிழக்கு தமிழர் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு (08) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தலைமை காரியாலயத்தில் இருந்து “அரசியல் பாதையில் அவள்” எனும் தொனிப்பொருளில் பதாதைகளை ஏந்தியவாறு, பெண் உரிமைக் கோசங்களை எழுப்பியவாறும் பிரதான மகளீர் தின நிகழ்வு இடம்பெறும் அரசடி தேவநாயகம் மண்டபத்தை பேரணியாக வந்தடைந்தனர்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் சுசிகலா அருள்தாஸ் அவர்களின் தலைமையுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களது தாயார் திருமதி.கமலா சிவநேசதுரை ஆகியோரது பிரதான பங்குபற்றுதலுடன் உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்கள் உள்ளிட்டோரது பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

























