இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நள்ளிரவு 12.00 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில் 317.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை 81.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 398.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
365 ரூபாவாக இருந்த லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 ஒரு லீற்றரின் விலை ரூ. 90.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 455.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.303.00 ஆக இருந்த லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை ரூ. 79.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 382.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.353.00 ஆக இருந்த லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 ஒரு லீற்றரின் விலை ரூ. 90.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 443.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ. 195.00 ஆக இருந்த லங்கா மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை ரூ.60.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ.255.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





