கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் புதிய பீடாதிபதியாக பேராசிரியர் க. சுரேஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 


கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் புதிய பீடாதிபதியாக பேராசிரியர் க. சுரேஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (23) நடைபெற்ற பீடாதிபதி தேர்தலில் 29 வாக்குகளைப் பெற்று இவர் புதிய பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் தலைவராகக் பேராசிரியர் க. சுரேஸ் கடமையாற்றி வருகின்றார்.

 அவுஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லான்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சுற்றுலாத்துறையில் தனது கலாநிதிப் பட்டத்தினை முடித்து, தற்போது பொருளாதாரப் பேராசிரியராகக் பணியாற்றுகின்றார்.

இந்த நிலையில் புதிய பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இவர் நாளை (24.03.2026) கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடமானது அதிக எண்ணிக்கையிலான மாணவர்களையும் அதிகளவான துறைகளையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.