மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் கேட்போர் கூடத்தில் கழிவு முகாமைத்துவம் பற்றிய கருத்தரங்கு அனைத்து ஆதார மற்றும் பிரதேச வைத்தியசாலைகளின் கழிவு முகாமைத்துவ பொறுப்பு உத்தியோகத்தர்களுக்கு 19.03.2025 அன்று பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் R.முரளீஸ்வரன் அவர்களின் பணிப்புரைக்கமைய இடம்பெற்றது.
சுகாதார சேவை நிலையங்களில் கழிவு முகாமைத்துவ ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமைய அவற்றை பிரித்தெடுத்தல்,சரியான முறையில் இடமாற்றுதல்,களஞ்சியப்படுத்தல், பாதுகாப்பான முறையில் அகற்றுதல் பற்றி பொறுப்பு வைத்திய அதிகாரி சகாய தர்ஷினி அவர்களால் கலந்துரையாடப்பட்டது.கழிவு உற்பத்திகளை எவ்வாறு குறைப்பது, பச்சை உற்பத்தித்திறனுக்குரிய உத்திகளை கையாளுதல் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.மேலும் மதிப்பீட்டு அறிக்கைகள், மேற்பார்வை செயற்பாடுகள், தொடர் கண்காணிப்புகளின் முக்கியத்துவம் பற்றியும் அறிவுறுத்தப்பட்டது.
உத்தியோகத்தர்களின் பொறுப்புகளும் கடமைகளும் பற்றி பிராந்திய சுகாதார நிர்வாக உத்தியோகத்தர் ரகுராஜா அவர்களால் கலந்துரையாடப்பட்டது.இந்நிகழ்வானது சுற்றுச்சூழல் மற்றும் தொழில் பாதுகாப்பு பிரிவினர் ஒருங்கிணைத்து நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)
.jpeg)




.jpeg)





