சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் விழிப்புணர்வு வீதி நாடகம் புதிய மாவட்ட செயலக வாளாகத்தில் இடம் பெற்றது.
பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை எனும் தொனிப்பொருளில்
உதவி மாவட்ட செயலாளர் ஜீ பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட மகளிர்
அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சந்திரசேகரம் அருணாளினி ஏற்பாட்டில்
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலைய கலாசார குழுவினரினால் விழிப்புணர்வு
நாடகம் நிகழ்த்தப்பட்டன.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது தேசிய ரீதியில் சிறந்த தொழில் முயற்சியாளராக விருது பெற்ற ஜெய வாசன் மேரி டயனா அவர்களுக்கு உயர் அதிகாரிகளினால் கெளரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





