புதிய அலை கலை வட்டம் - மகளிர் அணியின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வீரவனிதையர் விருது விழா

 


 


 புதிய அலை கலை வட்டம் - மகளிர் அணியின்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,
வீரவனிதையர் விருது விழா
சமூகத்தில் தடம் பதித்த சாதனைப் பெண்களை கௌரவிக்கும் உன்னத நிகழ்வானது
மார்ச் 07, 2026 
 சனிக்கிழமை  கல்யாண முருகன் மண்டபம் 
 செட்டியார் தெரு, கொழும்பு - 11 
இல் நடைபெற்றது.
பெண்மையின் பெருமையைப் போற்றும் இவ்விழாவில் 
 "வீரவனிதையர்"விருதினை இந்து சமய கலாச்சார அலுவல்கள்  திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். இவர் அறநெறிக்கல்வி வளர்ச்சியில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பணிபுரிந்தவர். தன்னலமற்ற அர்பணிப்புள்ள சேவைக்கு இவருக்கு கிடைத்த சிறப்பான கௌரவம் ஆகும்.