கட்டாக்காலி மாடுகளின் தொல்லையால் அவதியுறும் மட்டக்களப்பு ஆரையம்பதி மக்கள்!










மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பல பகுதிகளில்   பிரதான வீதிகளில் கட்டாக்காலி
மாடுகளின் தொல்லையினால்    வாகன
சாரதிகளும் பாதசாரிகளும் பாடசாலை   மாணவர்களும்   பெண்களும்  முதியவர்களும்    பலவிதமான   பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க   வேண்டியுள்ளது.

கட்டாக்காலி மாடுகளை மேய்ச்சலுக்கு   விடுவோர் ஆய்ந்தோய்ந்து பாராமல்
தமது பராமரிப்பிலுள்ள மாடுகளை  மக்கள் பயன்படுத்தும் பாதைகளிலும் குறிப்பாக   பிரதான வீதிகளில் விடுவதனால்  வீதி விபத்துக்கள்  அண்மைக்காலங்களில்   இடம்பெற்றுள்ளன.


வீதியில் பயணிக்கும் மோட்டார்
சைக்கிளுக்கு முன்னால் இவை
திடீரென பாய்வதால் விபத்துக்குள்ளாகி  பலர்
படுகாயமடைந்து சென்றதாகவும் மக்கள் தெரிவித்தனர்

மாடுகள் கழிக்கும் மலத்தினால்
பலவிதமான சுகாதார சீர்கேடுகள்
இடம்பெறுவதுடன் மலத்தில் வழுக்கி
விபத்துக்களும் சம்பவித்துள்ளன
ஆரையம்பதி பிரதேச சபையாலும் 
இவ்விடயம்   தொடர்பாக தீர்மானங்கள் கொண்டு வந்தும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

தொடர்ச்சியான  நிலையானதிட்டமொன்று வகுக்கப்படாமையினால்
தொடர்ந்தும் இக் கட்டாக்காலி மாடுகள்    பிரதான வீதிகளிலேயே திரிகின்றன.    இது தொடர்பில் சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்துமாறு ஆரையம்பதி பிரதேச மக்கள்
கேட்டுள்ளனர்