கிழக்கில் அமைதியான முறையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் பெருநாள் கொண்டாட்டம்-காத்தான்குடியில் பெருநாள் தொழுகையில் பெருமளவிலான மக்கள்..










இன்று மலர்ந்துள்ள. ஈதுல் பித்ர் புனித நோன்புப் பெருநாள் பெருநாளை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பெருநாள் தொழுகை காத்தான்குடி கடற்கரை  திடலில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

அஷ்ஷெய்க் எம்.எம்.மன்சூர் மதனி பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் நடாத்தினார்.

பெருநாள் குத்பாவையொட்டி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

விஷேட துஆ பிராத்தனையிலும் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டனர்.