நாடளாவிய ரீதியில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்களை இன்று (23) முதல் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 110 ரூபாகவும், ஏனைய ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் 90 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பயணிகள் இந்தப் புதிய கட்டண முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





