மண்முனைப்பற்று பிரதேச கலாசார பேரவை, கலாசார அதிகார சபையின் நிருவாக சபைக் கூட்டம் 2026.02.26ஆம் திகதி கலாசார பேரவை உபதலைவரும் உதவிபிரதேச செயலாளருமாகிய திரு.கி.இளம்குமுதன் அவர்களின் தலைமையில் ஒரு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. இதில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர்கள், மற்றும் கலாசார பேரவை, அதிகாரசபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
வரவேற்புரை தலைமை உரையைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் இடம் பெற்ற கலாசார நிகழ்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் புதிய நிர்வாக சபை தெரிவுக்கான பொதுக் கூட்டம் நடத்துவது தொடர்பாகவும் மூத்த கலைஞர்களையும் இளம் கலைஞர்களையும் ஒன்றிணைத்து இவ்வாண்டுக்கான புதிய நிர்வாக சபை தெரிவினை பலப்படுத்துவது என 2026.03.14 திகதி சனிக்கிழமை நிர்வாக சபை தெரிவு இடம்பெறுவதாக தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் மாதாந்தம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கலை நிகழ்வுகள் மண்முனைபற்று பிரதேச செயலக பிரிவு எல்லைக்குள் நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலாசார உத்தியோகத்தினால் கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து உத்தியோகத்தர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியுரை கூறப்பட்டதுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.


.jpeg)

.jpeg)

.jpeg)





