மகளிர் தினத்தினை முன்னிட்டு மண்முனை பற்று பிரதேச செயலக வளாகத்தில் இன்று 2026. 03. 10 செவ்வாய்க்கிழமைஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தின நிகழ்வுடன் ஒன்றுபட்டதாக பெண்களுக்கு எதிரான வன்முறையை மதுவிலிருந்து பாதுகாக்கும் நோக்குடன் பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷணகெளரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் போதைப்பொருள் எதிர்ப்புவாரத்தினை முன்னிட்டு அது தொடர்பான சுவரொட்டி காட்சி படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இதில்
பட்டிமன்ற பேரவையின் நடுவராக கலந்து சிறப்பித்த இந்தியாவின் தமிழ் நாடு முனைவர் S.D கலையமுதன்
கலந்து சிறப்பித்திருந்ததுடன் அலுவலக உதவி பிரதேச செயலாளர், மற்றும் நிர்வாக உத்தியோகத்தர், கணக்காளர் உட்பட அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்களினால் போதைப் பொருள் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.











