மட்டக்களப்பு மண்முனை பாலத்திற்கருகாமையில் உள்ள தீவுப் பகுதியில் உற்பத்தி செய்து கொண்டிருந்த 1 இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 67,500 மில்லி லீட்டர் கசிப்பு போதைப் பொருள் பொலிசாரினால் கைப்பற்றல் இது நபர்கள் கையும் களவுமாக கைது!
மண்முனை பாலத்திற்கருகாமையில் உள்ள தீவுப் பகுதியில் உற்பத்தி செய்து கொண்டிருந்த 1 இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா 67,500 மில்லி லீட்டர் கசிப்பு போதைப் பொருளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் பதில் கடமை நிலைய பொறுப்பதிகாரி ஜோய் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பாலத்தருகில் உள்ள தீவு பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இரு நபர்களை சம்பவ இடத்தில் வைத்து கைது செய்ததோடு, இரண்டு பரள்கள் மற்றும் இரண்டு கலன்களில் உற்பத்தி செய்து வைத்திருந்த நிலையில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று 12.03.2026 வியாழக்கிழமை கொக்கட்டிச்சோலை பொலிசார் நடாத்திய திடீர் சுற்றி வளைப்புகளின் போதே
கேஸ் 01
கேஸ் அடுப்பு 01
சுத்து பைப் 02 கைப்பற்றப்பட்டுள்ளது.










