மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி-2026

 


து .



































































































மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி சிவானந்த தேசிய பாடசாலை மைதானத்தில் 2026மார்ச் 13ஆம் திகதி கல்லூரி அதிபர் S. தருமுதாஸ் தலைமையில் இடம் பெற்றது. ஆன்மீக அதிதியாக கல்லடி உப்போடை இராம கிருஷ்ண மிஷன் உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி உமா தீக்ஷானந்தஜீ மகராஜ் கலந்து சிறப்பித்தார் .

 பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய பணிப்பாளர் தினகரன் ரவி பங்கேற்றிருந்தார் .
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள்    மாலை அணிவித்து பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு பாடசாலை சமூகத்தினரால் வரவேற்கப்பட்டனர்.  

அதிதிகள் வரவேற்பை தொடர்ந்து       தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்ல கொடிகள் ஏற்றப்பட்டதோடு  தேசிய கீதம்  பாடசாலை கீதம் இசைக்கப்பட்டது .

விளையாட்டு நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு மாணவர்களின் சத்தியபிரமாண நிகழ்வுடன்   ஆரம்பமானது .

  நிகழ்வில்  இல்லங்களின் அணிவகுப்பு , மாணவர்களின்  உடற்பயிற்சி என்பன இடம் பெற்றன

இல்ல விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் அதிதிகளால் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .
நிவேதிதா இல்லம் அதிக புள்ளிகளைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை தட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது .