மட்டக்களப்பு கோட்டைமுனை- புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய கொடியேற்றம் 2026.03.23 திங்கட்கிழமை மணிபகல் 12.00 மணிக்கு இடம் பெற்றது
காலையில் ஆரம்பமான மூலஸ்தான பூஜையுடன் கூடிய கிரியைகளைத் தொடர்ந்து ஆலயத்தில் கொடித்தம்பத்தில் நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றப்பட்டு அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.
கொடியேற்ற நிகழ்வில் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து மாரி அம்மனை பக்தி பூர்வத்துடன் வழிபட்டதை காணக்கூடியதாக இருந்தது.
மஹோற்சவமானது 10தினங்கள் நடைபெற உள்ளது
எதிர் வரும் செவ்வாய்க்கிழமை 31.05.2026 காலை 08.00 மணி இரதோற்சவம் இடம் பெற உள்ளது .
2026.04.01- புதன் கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடை பெற உள்ளது .
ஆலயத்தின் அம்பாளின் தீர்த்தோற்சவம் நடைபெற்று மாலை கொடியிறக்கத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.




