மட்டக்களப்பு மாவட்டம் பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு 1.6 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது .

 


மட்டக்களப்பு மாவட்டம் பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில்  மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவற்றுக்குரிய இயந்திரங்களின்றி, மூடப்பட்டிருந்த மகப்பேற்று விடுதிக்குரிய மருத்துவ உபகரணங்கள்  செவ்வாய்கிழமை (10.03.2026) வழங்கி வைக்கப்பட்டன. 

பிரித்தானியாவில் வசிக்கும் மார்க்கண்டு நேசராசாவின் 1.6 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இதன்போது வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டன.

பழுகாமம் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அலைச்சாந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மகப்பேற்று வைத்திய நிபுணர் கருணாகரன், மட்டக்களப்பு வட்ஸ் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், வைத்தியசாலை நிருவாகத்தினர், தாதியர்கள், என கலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதுவரையில் தடைப்பட்டிருந்த பழுகாமம் பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி இனிமேல் இயங்கவுளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.