குளத்தில் குளிக்கச்சென்ற 09 வயது சிறுமியை முதலை இழுத்து சென்றது .

 


மரதன்கடவல ஹினுகிரியாவ குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை முதலை ஒன்று எழுத்துச் சென்றுள்ளதுடன் 4 மணி நேர தேடுதலுக்குப் பின்னர் சிறுமியை கண்டு பிடித்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

மரதன்கடவல பொலிஸ் பகுதிக்குட்பட்ட ஹினுகிரியாவ குளத்தில் தனது பாட்டியுடன் நேற்று முன்தினம் (19) பிற்பகல் குளித்துக் கொண்டிருந்த போது சிறுமியை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி கணேவல்பெல ஹீனுகிரியாவ பகுதியைச் சேர்ந்த 09 வயதுடையவராவர்.

இது தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் பிரதேச வாசிகள், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய 4 மணி நேரத்  தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து முதலையிடம் இருந்து சிறுமி மீட்கப்பட்டு உடனடியாக மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிறுமி உயிரிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.