உதவித்தாதியர், முதலுதவி மற்றும் மருத்துவ துறை சார் பயிற்சி நெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் ஹோட்டல் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.


 






 








































































மருத்துவ நிபுணர் சங்கம் லண்டன் அமைப்பின் நிதியுதவியின் கீழ் கிழக்குப் பிராந்திய கல்வி மற்றும்  பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் தொழிற்பயிற்சி பிரிவினால் நடாத்தப்பட்ட உதவித்தாதியர், முதலுதவி மற்றும் மருத்துவ துறை சார் பயிற்சி நெறியினை கடந்த 2025ம் ஆண்டு கால பகுதியில் நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  ( 24.02.2026 ) செவ்வாய்க்கிழமை  மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள Green Garden Hotel பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வினை கிழக்கு பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின்  ஸ்தாபகரும் பணிப்பாளரும் ஆகிய கீர்த்தி ஸ்ரீ தேசசக்தி எந்திரி
தயாளசீலன் மயூரன் (சமாதான நீதவான்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மருத்துவ நிபுணர் சங்கம் லண்டன் அமைப்பின் பிரதிநிதி சிரேஷ்ட வைத்தியர் திருமதி காந்தா நிரஞ்சன் (லண்டன்) அவர்களும்,

கௌரவ அதிதிகளாக  குடும்ப நல மருத்துவர் வைத்தியர் திரு நடராஜா நிரஞ்சன் லண்டன் அவர்களும்,

சிறப்பு அதிதிகளாக மீராவோடை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் யோகநாதன் சோபிதா, 

மட்டக்களப்பு சைவ மங்கையர் அமைப்பின் உப தலைவி திருமதி கலா மகேந்திரராஜா

மட்டக்களப்பு Earn Ceylon  நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.குணசீலன் சதீஸ்குமார், 

 மலேசிய ஸ்மார்ட் டெக் நிறுவனத்தின் பணிப்பாளர் நேசராஜா நேருஜன்,

கிரேஸ் டெக் சொலுஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் நித்தியானந்தராஜா அனிஸ்டன்


தொழிற்பயிற்சி நிலையத்தின் போதனாசிரியர்களும்  தாதிய உத்தியோகத்தர்களும்  ஆகிய
திருமதி சந்திரமணி புஷ்பராஜா,
திரு.சௌந்தரராஜா கோகுலராஜா,
திரு.ஜெயராமநாதன் சுரேஷ்ரூபன்
 மற்றும்  கிழக்குப் பிராந்திய கல்வி மற்றும்  பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் தொழிற்பயிற்சி பிரிவின்  நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளும் மற்றும் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வின் விசேட அம்சமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான இலவச  தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்காகவும் அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரதுறை மற்றும் கல்வித்துறையின் வளர்ச்சிக்காக பல லண்டன் நிறுவனங்களோடு இணைந்தும் தங்களுடைய சொந்த நிதி உதவியுடனும்  மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பல சேவைகளை தொடர்ந்து செய்து வரும் லண்டனை சேர்ந்த  வைத்தியர்களான திரு நடராஜா நிரஞ்சன் மற்றும் திருமதி காந்தா நிரஞ்சன் அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சார்பாக கிழக்குப் பிராந்திய கல்வி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தினால் அவர்களுடைய சேவைகளை கௌரவித்து  விருதும் வழங்கப்பட்டது.