உதவும் பொற்கரங்கள் அமைப்பினால். நாடளாவிய ரீதியில் மர நடுகை திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.













 உதவும் பொற்கரங்கள் அமைப்பு - கனடா அமைப்பின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான தமிழ் பணி செம்மல் ,சமூகசேவகர்,திரு விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களின் 66 ஆவது பிறந்த தினம் எதிர்வரும் மார்ச் 3 ம் திகதியாகும் அதனை முன்னிட்டு  ஒரு சாகாப்த காலமாக தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் தமிழ் மக்களுக்கு செய்த பணியினை, சேவையை கௌரவிக்கும் முகமாக தாயக உறவுகளால். நாடளாவிய ரீதியில் மர நடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

உதவும் பொற்கரங்கள் அமைப்பின் பணிப்பாளர் திரு விசு கணபதிப்பிள்ளை அவர்கள் தனது சொந்த நிதி மற்றும், தனது நண்பர்கள், உறவுகளின் பங்களிப்புடனும், தன்னிடம் உதவி கேட்கும் உறவுகளுக்காகவும் கல்வியை,தொடர்வதற்கு பொருளாதார ரீதியாக. நெருக்கடியை சந்திக்கும் மாணவர்களுக்கும். சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக உதவி செய்து, சமூக சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கனடா நாட்டு அரசாங்கத்தின் ஊடாக சமூக சேவைக்கான பல்வேறுபட்ட விருதுகளை பெற்றுள்ள அவரை கௌரவிக்கு முகமாக தாயகத்திலே இம்ம நடுகை திட்டம் எதிர்வரும் 03ம் திகதி வரை. முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.