இலவச அமரர் ஊர்தி கோவில் போரதீவு கிராம சமூக சேவையாளர் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபைக்கு வழங்கிவைப்பு!

 




 கிழக்கின் குரல் 

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோரினால்  friends of Batticaloa hospitals (FOBH)  அமைப்பினருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கோவில் போரதீவைச் சேர்ந்த லண்டனில் பிரபல தொழிலதிபராக இருக்கும் மார்க்கண்டு நேசராசா குடும்ப உறவுகளின் நிதி பங்களிப்புடன் சுமார் 55 லட்சம் பெறுமதியான  மகேந்திரா பொலிரோ வாகனம் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வு மாநகர பிள்ளையாத்தின் ஆலயத்தில் இடம் பெற்ற விசேட பூசை வழிபாட்டினைத் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்துடன், மாநகர முதல்வரிடம் குறித்த வாகனத்தின் ஆவணங்கள் கையளிக்கப்பட்டது.