மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் மனநல மற்றும்
சமூகச் சவால்கள் தொடர்பாக ஒருங்கிணைந்த தடுப்பு மற்றும் மேம்பாட்டு
நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று 27.02.2026 அன்று
பிற்பகல் 3.00 மணிக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக
மாநாட்டு மண்டபத்தில் வைத்திய கலாநிதி டாக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்களின்
தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தில் தற்கொலைச் சம்பவங்கள், இளவயது கர்ப்பம், போதைப்பொருள் பயன்பாடு, மதுபான தவறான பயன்பாடு மற்றும் பாடசாலை விலகல்கள் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதை முன்னிட்டு, பாடசாலை, மற்றும் சமூக மட்டங்களில் ஒருங்கிணைந்த தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டமானது சுகாதாரம், கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டமாக அமைந்தது.
மாவட்ட மற்றும் பிரதேச செயலக அலுவலக பிரதிநிதிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் ,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மற்றும் உதவி மாவட்ட செயலாளர் திரு. பிரணவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மேலும் JMFOA அமைப்பின் தலைவர் டாக்டர் நவநீதம் மற்றும் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் திரு. தனநந்தன் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு வாழ்க்கைத்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குதல் மற்றும் பெற்றோர்களுக்கான புதிய பயிற்சி தொகுதிகள் மூலம் நல்ல பெற்றோர்களை ஊக்குவித்தல் போன்ற திட்டங்களை விளக்கினர்.
மாவட்ட மட்டத்தில் உருவாகி வரும் இச்சவால்களை எதிர்கொள்ள துறைகள் இடையேயான ஒருங்கிணைப்பு, கூட்டு செயல் திட்டங்கள் மற்றும் சமூக பங்களிப்பு ஆகியவை அவசியம் எனக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடல், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனநல பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் மாவட்ட மட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான முக்கிய ஆரம்பமாக அமைந்தது.