கிளிநொச்சி
செல்வா நகர் வித்தியாலயத்தில் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப்
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் பரீட்சையின் இறுதிநாளான நேற்று
வியாழக்கிழமை (26.02.2026) பரீட்சை நிலையமான கிளிநொச்சி இந்துக்
கல்லூரியிலிருந்து மீண்டும் பாடசாலை திரும்பி வந்து சிரமதானம் செய்ததுடன்,
பாடசாலை வளாகத்தில் பயன்தரு மரக்கன்றுகளை நாட்டினர்.
பின்னர் தாம் கல்வி கற்ற பாடசாலையை உள்ளன்புடன் வணங்கி அதிபர், ஆசிரியர்களிடம் ஆசிகள் பெற்று மகிழ்வுடன் விடைபெற்றனர்.
இத்தகைய செயற்பாடுகளைப் பார்க்கின்ற போது மகிழ்வாக இருக்கிறது.
“வளரும் பயிரை முளையில்த் தெரியும்”
இப்பாடசாலை மாணவர்களையும் அவர்களைச் செதுக்கிய அதிபர் மற்றும் ஆசிரியர்களைகளை நாமும் வாழ்த்தி மகிழ்வடைகிறோம்.