யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் விழிப்புலனற்ற மாணவர்கள் இருவர் பட்டம் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

 



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பட்டமளிப்பு விழாவில், சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்கள் இருவர் பட்டம் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

துரைராசா அருண்குமார் மற்றும் சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகிய இவ்விருவரும் விடாமுயற்சியுடன் பயின்று தமது பொதுக் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

பார்வைச் சவால்களுக்கு மத்தியிலும் கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற உயரிய இலட்சியத்துடன் அவர்கள் பயணித்த விதம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

தடைகளைத் தகர்த்துப் பட்டம் வென்ற இவர்களைப் பல்கலைக்கழகச் சமூகம் மற்றும் பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பாராட்டி கௌரவித்து வருகின்றனர்.

இவர்களின் இந்த வெற்றி, உடல் குறைகள் ஒருபோதும் முன்னேற்றத்திற்குத் தடையல்ல என்பதையும் மனஉறுதியே வெற்றிக்கான வழி என்பதையும் உலகுக்கு பறைசாற்றியுள்ளது.