மனிதன் தன் உள்ளத்தின் உள்ளே இருக்கும் மனித மாண்மை உயர்த்தி உண்மை மனிதனாக வாழ வேண்டும்-அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கூறினார்.


 

 






 



மனிதன் தன் உள்ளத்தின் உள்ளே இருக்கும் மனித மாண்மை உயர்த்தி உண்மை மனிதனாக வாழ வேண்டும்
மனிதன் தன் உள்ளத்தின் உள்ளே இருக்கும் மனித மாண்மை உயர்த்தி உண்மை மனிதனாக வாழ வேண்டும் என அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கூறினார். 
வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் செயல் நிறைவேற்றுப் பணிப்பாளரும் ஜேசுசபைத் துறவியுமான அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளாரின் எண்பத்தி எட்டாவது பிறந்தநாள் இன்று 24.02.2026ஆம் திகதி காலை 10.00 மணிக்கு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. 
இந்து சமய ஆசியினை இளம் சைவப் புலவர் அலங்கார வினோதரர் சிவ  விபீஷணன் ஐயா அவர்களும்> இஸ்லாமிய சமய ஆசியினை ஜனாப் முஹமட் நழீம் அவர்களும் நிகழ்த்த வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் பணியாளர்களால் பிறந்தநாள் பாடல் பாடப்பட்டு, பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு, பலரதும் நல் வாழ்த்துக்களுடன் அருட்தந்தையின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது. 
நிகழ்வில் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவினால் தயாரிக்கப்பட்ட அருட்தந்தை போல் சற்குணநாயகம் பற்றிய அவரது பன்முக ஆளுமையை விளக்கும் விவரண ஒளிப் படம் வெளியிடப்பட்டதுடன் செல்வி முஹமட் நழீம் அமானா ஹிஷ;மத் அவர்கள் கவிதைபாட, பணிப்பாளர் சபை உறுப்பினர் திரு. மோகனதாஸ் மற்றும் அன்பழகன் குரூஸ் ஆகியோர் உரையாற்றினர்.
அருட்தந்தையின் ஏற்புரையில் 'மனிதன் மீண்டும் பிறக்காவிட்டால் அவன் உயர்ந்த பணிகளைச் செய்ய முடியாது> அவன் மீண்டும் பிறப்பதால் தன் வாழ்வை மாண்புமிக்கதொரு வாழ்க்கையாக மாற்ற முடியும். மீண்டும் பிறத்தல் என்பது உள்ளத் தூய்மையுடன் பிறத்தலாகும்' எனக் கூறியதுடன்> அனைவருடனும் சேர்ந்து தனது எண்பத்தெட்டாவது பிறந்தநாளை முப்பதாவது ஆண்டின் மகிழ்வின் பயணத்தை அனுசரிக்கும் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா குடும்பத்துடன் மகிழ்வுடன் கொண்டாடினார்.