வாழைச்சேனை சந்தைப்பகுதியில் கடந்த 13.02.2026 அன்று (வெள்ளிக்கிழமை) அட்டகாசம் புரிந்த காட்டு யானையின் தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஹம்மதிய்யா வீதி, பிறைந்துறைச்சேனையை சேர்ந்த அச்சி முஹம்மது றம்ழார் இன்று (24) நண்பகல் காலமானார்.
குறித்த தினம் வாழைச்சேனை பகுதிக்குள் புகுந்த யானை இப்பிரதேசத்தில் நான்கு பேர் மீது தாக்குதல் மேற்கொண்ட நிலையில், கொழும்பை வசிப்பிடமாக்க் கொண்ட பெண்ணொருவர் சம்ப தினம் பலியானதுடன், மூவர் படுகாயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நபரான வாழைச்சேனை சேர்மன் கனகரெத்தினம் வீதியைச்சேர்ந்த 65 வயதுடைய வேலும்மயிலும் கடந்த 17.02.2026ம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ந.குகதர்சன்





