ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பெயரில் கிழக்கு மாகாணத்தில் காட்டு யானை தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை அமைச்சர் சுனில் கந்துன் நெத்தி

 

 

 


 

 ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பெயரில் கிழக்கு மாகாணத்தில் காட்டு யானை தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை  அமைச்சர் சுனில் கந்துன் நெத்தி

 காட்டு யானை தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய வாகன வசதிகளையும் ஆளணிகளையும் வனவிலாக அதிகாரிகளுக்கு பெற்றுக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

 தேவையான வாகனங்களை வாடகைக்கு அமர்த்திய எனும் அல்லது அப்பகுதிக்குரிய பிரதேச சபைகளில் இருந்து பெற்றுக் கொடுப்பதற்கும் மாவட்ட மட்டங்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனதீவு  பிரதேசம் அதிகம் காட்டு யானை தாக்கத்தில் பாதிக்கப்படுவதாகவும் அதற்கு பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்பு வழங்கப்பட உள்ளதாகவும் 

இது பற்றி வன இலாக அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பொது மக்களின் உயிரிழப்பு இடம்பெற்று வருவதை தடுக்க  அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும்

 இதேவேளை விவசாயிகளுக்கு முக்கியமாக காணப்படும் கிராமிய பாலங்கள் மாவட்டத்தில் அபிவிருத்தி செய்ய 345 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்க அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

 மட்டக்களப்பு மாவட்டத்தில் 43 கிராமிய வீதிகளை அமைக்க பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக
மட்டக்களப்பில் நேற்று மாலை ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

 வரதன்