வவுணதீவு, வலையறவு பாலத்தருகில் உள்ள வயல் கண்டத்தில் உள் நுழைந்த ஏழு காட்டு யானைகள் ( 24) நேற்றைய தினம் நிலை கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது
மட்டக்களப்பில்
தொடர்ச்சியாக மூன்று நாட்களாக காட்டு
யானைக்கூட்டம் வவுணதீவு, பகுதியில் நிலை கொண்டுள்ளன
தாண்டியடி, கன்னங்குடா. திருப்பெருந்துறை
பகுதிகளிற்குள் நேற்றிரவு உட்
புகுந்ததனால் அப்பகுதியில்
பாதுகாப்பற்ற நிலை காணப்பட்டது.
மட்டக்களப்பு மேற்கு பிரதேச
செயலக பிரிவிற்குட்பட்ட
வவுணதீவு பகுதியில் காட்டு
யானைக்கூட்டம் ஊருக்குள்
உட் புகுந்ததால் நள்ளிரவில்
அப்பகுதி மக்கள் பரபரப்புக்குள்ளாகியதுடன் சிதறியோடியதுடன் பெரூம்
அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பில்
தொடர்ச்சியாக மூன்று நாட்களாக இரவிரவாக களத்தில் இறங்கி யானை கூட்டத்தை விரட்டும் முயற்சியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு சவாலாகவே இது அமைந்துள்ளது.
மட்டக்களப்பு பகுதிக்குள் பல பகுதிகளில் இருந்தும் இரவிரவாக யானைக் கூட்டங்கள் நாளாந்தம் புதிது புதிதாக வருகின்றன. இதனால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குட்பட்டு காட்டு யானைகளை விரட்டி காட்டுப் பகுதிக்குள் அனுப்பிய போதும் மறுநாள் யானைகள் மீண்டும் மீண்டும் படையெடுத்து வருகின்றன.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதோடு காட்டு யானைகளை நிரந்தரமாக காட்டுப் பகுதிக்குள் அனுப்பித்தருமாறும் அரசாங்கத்திடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்












