உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக்கான இணைப்புச் செயலாளராக அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ நியமனம்!!

கனடாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், இலங்கையில் முதன்முறையாக மத நல்லிணக்கம் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான நல்லுறவு பேணி பாதுகாத்தல் போன்ற துறைகளுக்கான இணைப்புச் செயலாளராக, அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசைக் கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைக்கான தூதுவருமான அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் மற்றும் இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான தே. செந்தில்வேலவர் ஆகியோர் முன்னிலையில், கொழும்பு கிளை காரியாலயத்தில் குறித்த பதவி பிரமாண நிகழ்வு நடைபெற்றது.