இரவில் காட்டு யானைககள் மக்கள் குடியிருப்புக்குள் திடீரென உள் நுழைந்ததால் மட்டக்களப்பு வவுணதீவில் பெரும் பதற்ற நிலை. அச்சத்தில் பொது மக்கள் .



 








மண்முனை மேற்கு  பிரதேச  செயலக பிரிவிற்குட்பட்ட  வவுணதீவு பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள்  உட் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாந்தீவில் கடந்த தங்கியிருக்கும் காட்டு யானைகள் வவுணதீவு, தாண்டியடி, கன்னங்குடா ஆகிய பகுதிகளிற்குள்(23) இன்று  இரவு வேளையில்  உட் புகுந்ததனால்  அப்பகுதியில் மிகுந்த பதற்ற நிலை காணப்பட்டது.
  குறித்த யானைகளை அப்பகுதிகளை விட்டு விரட்டும் நடவடிக்கையில் வன ஜீவ ராசி திணைக்களத்தினர் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக தமது பகுதிகளுக்குள் புகும் காட்டு யானைகள் பயன் தரும் மரங்களை துவம்சம் செய்து நாசப்படுத்துவதுடன்,  ஆலய மதில்கள் வேலிகளை உடைத்து சேதங்களையும் விளைவித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 மாந்தீவு பிரதேசத்தில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள காட்டு யானைக்கூட்டமொன்று பொதுமக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், விவசாயிகளுக்கும் அச்சுறுத்தலாகியுள்ளது. என்பதும்
குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினூடாக காட்டு யானைகளின் அழிவுகளிலிருந்து விவசாய செய்கைகளைப்பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்