நாமல் ராஜபக்ச தனது பிரித்தானிய விஜயத்தை லண்டன் பௌத்த விஹாரையில் வழிபாடு செய்து தொடங்கியுள்ளதாக தெரியவருகிறது.

 எதிர்ப்பை மீறி நாமலின் பிரித்தானிய விஜயம் ஆரம்பம் | Namal S Uk Visit Amid Protests

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது பிரித்தானிய விஜயத்தை லண்டன் பௌத்த விஹாரையில் வழிபாடு செய்து தொடங்கியுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வருடம் 100ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் லண்டன் பௌத்த விகாரையில் அவர் மகா சங்கத்தினரிடம் ஆசீர்வாதம் பெற்றதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

  இந்நிலையில், திட்டமிடப்பட்டிருந்த கேம்பிரிட்ஜ் யூனியன் உரை, எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக உருவான பாதுகாப்பு கவலைகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும், ஒக்ஸ்போர்ட் யூனியன் நடத்தப்பட்டவுள்ள உரையும், பிரித்தானியாவில் வாழும் இலங்கை சமூகத்தினருடன் நடைபெறவுள்ள சந்திப்புகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் கட்சி செயற்பாட்டாளர் மிலிந்த ராஜபக்சவும் நாமலுடன் இணைந்துள்ளனர்.