ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 69 வயது தாயாரும் 39 வயது மகனும் கைது .

 


மலர்ச் சாலையொன்றை நடத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் இயங்கி வந்த பிரபலமான மலர்ச் சாலை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நேற்று (25) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இந்த மலர்ச் சாலையின் உரிமையாளரான மகனும் அவரது தாயாரும் 21 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மகனுக்கு 39 வயது எனவும், தாயாருக்கு 69 வயது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கபடவுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேகநபர்கள் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது