65,000 ற்கும் மேற்பட்ட தேனீக்களை முகத்தில் தொடர்ச்சியாக 5 மணிநேரம் மற்றும் 3 நிமிடங்கள் இருக்க வைத்து சோழன் உலக சாதனை படைத்த எசக்கிமுத்து என்ற இளைஞர்.

 


 

 






 





































65,000 ற்கும் மேற்பட்ட தேனீக்களை முகத்தில் தொடர்ச்சியாக 5 மணிநேரம் மற்றும் 3 நிமிடங்கள் இருக்க வைத்து சோழன் உலக சாதனை படைத்த எசக்கிமுத்து என்ற திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர்.

தேனீக்கள் வளர்ப்பிலும் வணிகத்திலும் ஆய்விலும் பல முன்னைற்றகரமான செயல்களைச் செய்து வரும் திரு.
எசக்கிமுத்து என்ற இளைஞர் இந்த சோழன் உலக சாதனையை திருநெல்வேலி வள்ளியூரில்  அமைந்துள்ள மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1400 மாணவிகள் மத்தியில் மேற்கொண்டார். இதன்போது திரு.எசக்கிமுத்து 65,000 ற்கும் மேற்பட்ட இந்திய வகைத் தேனீக்களை தனது முகத்தில் பரவவிட்டு 5 மணிநேரம் மற்றும் 3 நிமிடங்கள் இருந்து இந்த உலக சாதனையை உறுதி செய்தார்.
சோழன் உலக சாதனை படைத்த திரு.எசக்கிமுத்துவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவை நடுவர்களினால் வழங்கிப் பாராட்டப்பட்டது.

இரு கண்கள், இரு மூக்குத் துவாரங்கள், இரு காதுகள் போன்ற உறுப்புகளை முழுமையாக மூடியவாறு வாயால் மட்டுமே புஞ்சை உள்ளிழுத்து அசையாமல் இவ்வளவு நேரம் இருப்பது ஒரு அறைகூழல் என அனைவரும் எசக்கிமுத்துவை வாழ்த்திப் பாராட்டினார்கள். 

இந்த நிகழ்வில் வைத்து தமது கடமைகளுக்கு அப்பால் சென்று மனித நேயத்துடன் மக்கள் தொண்டாற்றிய எலும்பு முறிவு மருத்துவர் திரு. ஜெபஸ்டின் ஆனந்த், வனத்துறை அலுவலர் திரு.யோகேஸ்வரன், மலையடிப்புதூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திரு.ரமேஸ், மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் திரு.லாரன்ஸ் மற்றும் சூழலியல் ஆர்வலர் திரு.அலெக்ஸ் செல்வன் ஆகியோருக்கு சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் உயரிய விருதுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.