மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வாண்டு 395 புதிய வீடுகளை அமைக்க கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது அமைச்சர் சுனில் கந்துன் நெத்தி




மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி திட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிரந்தர வீடு அற்றவர்களை  தெரிவு செய்து அவர்களுக்கான நிரந்தர காணி வீட்டு வசதிகளை அமைத்து கொடுக்க உள்ளோம் இதன் போது எமது அரசாங்கத்தினால் இன மத குல பேதம் அரசியல் வேறுபாடுகள் அன்றியும் பயனாளிகள் தெரிவு செய்யப்பட உள்ளனர் 

புதிய அரசாங்கத்தினால் தேசிய வீட்டு வசதி திட்டத்திற்கு அமைவாக ஒரு அழகான வாழ்க்கைக்கு சொந்த இருக்க இடம் என்னும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பிரதேச செயலக பிரிவிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட106 பயனாளிகளுக்கான முதல் கட்டமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் காசோலை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

 மாவட்ட தேசிய வீடமைப்பு  அதிகார சபையின் பணிப்பாளர் T. சுபாஸ்கரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற  நிகழ்விற்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் அருள்ராஜ் அரச உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் இவ்வு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

வரதன்