நாட்டில் இன்று(23) மழை வீழ்ச்சி குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென்மேல் வங்காள விரிகுடாவை அண்மித்த
வளிமண்டலத்தில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாட்டை
விட்டு விலகி செல்வதால் மழை வீழ்ச்சி குறைவடையும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வடக்கு, வடமத்திய மற்றும்
வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும்
என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும்
ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில
இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா
மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காலை
வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல்
திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.





