என். சௌவியதாசன்.
கல்முனை தமிழர் கலாச்சார அபிவிருத்தி பேரவை, பேரவை வளாகத்தில் இன்றைய
தினம்(17) பொங்கல் விழாவையும் கலைவிழாவையும் மிகவும் சிறப்பான முறையில்
நடத்திருந்தார்கள். இன்று காலை முதல் பொங்கல் விழா மற்றும் கோலம் போடுதல்
போட்டி என்பனவும், அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளையில் கல்முனை தமிழர்
கலாசார அபிவிருத்தி பேரவையின் தலைவர் திரு ஏ. விநாயகம் பிள்ளை அவர்களின்
தலைமையிலே கலை விழா முன்னெடுக்கப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்
திரு ரி.ஜே. அதிசயராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் கல்முனை
பிராந்தியத்தில் உள்ள அறநெறி பாடசாலைகளின்
மாணவர்களின் பல்வேறுபட்ட கலை
கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றன. அத்தோடு Zee தமிழ் TV புகழ் சபேசன்
அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. கோல போட்டியிலே கலந்து கொண்டு
வெற்றி பெற்றவர்களுக்கான, மற்றும் கலை நிகழ்வுகளில் கலந்து
கொண்டவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நிகழ்வில் இடம் பெற்றது
சிறப்பம்சமாகும்.







.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)



.jpeg)












