இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு- 2026

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 









 



















என். செளவியதாசன். 


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்  எற்பாட்டில்   திருக்கோவில் பிரதேச செயலகத்தில்  இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு 2026

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக   திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்கு
உட்பட்ட  அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு   திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் திரு த. கஜேந்திரன் தலமையில்  இன்று (17)இடம்பெற்றது. இந்நிகழ்வின் ஒருங்கினைப்பினை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி
மேற்கொண்டதுடன்  ஏற்பாடுகளை பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி  நிஷாந்தினி தேவராஜ் மேற்கொண்டார்.
 தேசிய கொடியேற்றம்
தேசியகீதம்,அறநெறி கீதம் , மற்றும் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு ஆரம்பமாகியது.
அதனைத் தொடந்து உறுதி மொழி எடுத்தல் மற்றும் தலமையுரை, விளக்கவுரை, என்பன இடம்பெற்றதுடன் அறநெறி ஆசிரியர்களுக்கான குறிப்பேடுகளில் கையொப்பம் இடும் நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது….
இந்நிகழ்வில்
 திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் ரெட்ணம் சுவாகர் மற்றும், மாவட்ட பதிவாளர் பிரதீப், திருக்கோவில் பிரதேச செயலக கிராம சேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர் மனோகரன், திருக்கோவில் பிரதேச இந்து சமய கலாசார உத காணிப்பிரிவு உத்தியோகத்தர் கோவிந்த சாமி, வளவாளர் சொற்பொழிவாளர் திரு ந.சனாதனன்,  செயலக உத்தியோத்தர்கள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் அறநெறிபாடசாலைகளின் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.