OneGov கணனி முறைமை உருவாக்கிய மட்டக்களப்பை சேர்ந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் வா.சிவாதினி கௌரவிப்பு.

 






OneGov கணனி முறைமை – உருவாக்கிய உத்தியோகத்தர் கௌரவிப்பு
OneGov கணனி முறைமையினை வடிவமைத்த தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களினால் புதிய மாவட்ட செயலகத்தில் கௌரவம் வழங்கப்பட்டது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிளின் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தரினால் உருவாக்கப்பட்ட OneGov கணனி முறைமையில் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சார்பில் பங்களிப்பு வழங்கியமைக்காக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் அவர்களினால் தகவல் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் வா.சிவாதினி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது உதவி பிரதேச செயலாளர் ஏ.ஜுமானா ஹஸீன் அவர்களும் கலந்து கொண்டார்.